கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமை பொலிஸ் பரிசோதகருமான பி.வீரசிங்கவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை அடுத்தே  குறித்த இடமாற்றம் பொலிஸ் உயர்மட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, களனி பொலிஸ் பிராந்தியத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு, சூப்பர் நியூமரரி நிலை (Supernumerary position) என்ற வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.

முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல், கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அச்சுறுத்தல்,  கையூட்டுப் பெறல், உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தே அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.