
கொரோனா தொற்றாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக விரைவான சிகிச்சையளிப்பதற்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ரோபோ இயந்திரமானது, இன்று (10) அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய மத்திய நிலையத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரோபோ தூர இடத்திலிருந்து முற்றாக செயற்படுத்த முடியும் என்பதுடன், நோயாளிக்கு அருகில் சென்று மருந்துகளை வழங்குதல், நோயாளியுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் மூலம் 25 கிலோகிராம் நிறையுடைய மருந்துகளை கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.