யாழ் கொடிகாமம் பகுதியில் அதிகாலையில் இளம்பெண் கடத்தல்..!

யாழ், கொடிகாமம் மந்துவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை வாள்கள், கத்திகளுடன் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல் 20 வயதான இளம் பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.

வீடொன்றுக்குள் முகத்தை மறைத்தவாறு வாள்கள், கத்திகள்,கொட்டன்கள் போன்றவற்றுடன் நுழைந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

இதனால் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில் அயலவர்கள் கூடியுள்ளனர். இதனையடுத்து தாம் சி.ஐ.டி போலீசார் என கூறியுள்ளனர்.

இதனை கேட்ட அயலவர்கள் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டதனை தமக்குச் சாதகமாக குறித்த கும்பல் வீட்டுக்குள்ளிருந்து 20 வயதான இள் பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.

சில மணித்தியாலங்களின் பின் கடத்தப்பட்ட பெண் வீட்டின் அருகில் உள்ள கோவிலடியில் இறக்கி விடப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் வாள்கள், கத்திகள் பொல்லுகளுடன் வந்த கும்பல் குறித்து பொலீசாசார் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை தமக்குத் தெரியும் எனக் கூறும் ஊர்மக்கள் அதில் ஒருவர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் ஒருவரின் நெருங்கிய உறவினர் எனவும் அதனாலேயே போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் கூறியுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com