இணைய தாக்குதலால் தரவு மீறப்படவில்லை

இலங்கையில் ஒரு சில அரச இணையத்தளங்கள், செயற்பாட்டாளர்கள் குழுவினால் (activist) சேதப்படுத்தப்பட்டதை (defaced) இலங்கை கணினி அவசர தயார்நிலைக்குழு | ஒருங்கிணைப்பு மையம் (Srilanka CERT | CC) உறுதிப்படுத்தியுள்ளது.

இணையத்தள செயலிழப்பானது, தாக்குதல் நடத்துபவரினால் இணையப்பக்கம் அல்லது இணையத்தளத்தின் காட்சி, தோற்றத்தினை மாற்றுவதன் மூலம் நிகழ்த்தப்படுகின்றது. தற்போது ஏற்பட்ட இணையத்தளங்களை இழிவுபடுத்தும் இந்த முயற்சியில் தரவு மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவர் வலியுறுத்தினார்.

“செயலணியினரால் தக்க தருணத்தில் பாதிப்புக்குள்ளான இணையத்தளங்களை அடையாளம் காணவும், நிலைமையை நிவர்த்தி செய்ய முடிந்தது எனவும் இந்த இணையத்தள தாக்குதல்கள் காலை 6.38 மணிக்கு கண்டறியப்பட்ட அதேவேளை, காலை 7.30 மணியளவில் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியில் உள்ள தகவல் பாதுகாப்பு பொறியாளர்களால் இணையத்தளங்கள் மீண்டும் சரிசெய்யப்பட்டது” எனவும் அவர் விளக்கமளித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com