
நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகலவத்தை தோட்டத்தில் இரு குடும்பத்தினரிடையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பகலவத்தை தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொல்லால் தாக்குதலுக்கு இலக்கான கிருஸ்னமூர்த்தி சந்திரபோஸ் ( வயது 34 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் பாரிய பொல்லால் தலையில் தாக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்களித்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் இராகலை பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது.