உயிருடன் பிடிக்கப்பட்ட அரிய வகை கரும்புலி இறந்தது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான வாழைமலைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட அரிய வகை கரும்புலி உடவளவ வனவிலங்கு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த கரும்புலி கடந்த 26 ஆம் திகதி சிக்கிய நிலையில் மஸ்கெலியா பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்டனர்.

சுமார் 08 வயதுடைய குறித்த கரும்புலி உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாலும் காயங்கள் காரணமாக அந்த கரும்புலி இன்று காலை உயிரிழந்ததாக உடவளவ வனவிலங்கு சிகிச்சை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com