
நுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் 31ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் பலர் கூடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.