மட்டு அரச அதிபரின் முக்கிய அறிவிப்பு!

மட்டக்களப்பில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 35 ஆயிரம் குடும்பங்களுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இவ்வாரம் வழங்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி உதவி, முதியோர் கொடுப்பணவு மற்றும் வலது குறைந்தோர் கொடுப்பனவு பெறத் தகுதியான காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5ஆயிரம் ரூபா கொடுப்பணவு இவ்வாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்ட செயலகத்தில் இன்று (09) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அரச அதிபர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த வாரம் சமுர்த்தி உதவி பெறுபவர்கள், முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள், புற்றுநோய், சிறுநீரக நோய் போன்ற விசேட நோய்க் கொடுப்பனவுகள் பெற்றுவந்த அனைவருக்கும் தலா 5ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால் தொழிலை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள சுமார் 17 ஆயிரம் குடும்பங்களுக்கும் இந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அடுத்த வாரத்தில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சதோச நிறுவனத்தினூடாக மானிய விலையில் பருப்பு, ரின்மீன், சீனி, பெரியவெங்காயம், கடலைபோன்ற அத்தியவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இப்பொருட்கள் வறிய மக்களைச் சென்றடையும் வகையில் அரச உதவி 5ஆயிரம் ரூபாவினைப் வழங்கும் இடங்களில் இரண்டு வாரங்களுக்குத் தேவையான சுமார் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com