பிரித்தானியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு- இன்று 412 பேர் இறந்துள்ளார்கள்

பிரித்தானியாவில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த முடிவு செய்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டு 412 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் இறந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் லாக் டவுன் இலகுவாக்கப்பட்டுள்ளது. இதனால் மேலதிக மக்கள் வெளியே நடமாட ஆரம்பித்துள்ள நிலையில். திடீரென இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது. இது தொடரப் போகிறதா ? இல்லை மீண்டும் கட்டுப்பாட்டினுள் வருமா என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது.