அனைத்து பொருட்களுக்கான இறக்குமதியை நிறுத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

தற்போது தடை செய்யப்பட்ட பொருட்களைத் தவிர வேறு பொருட்கள் மீதான இறக்குமதியை நிறுத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி இராஜாங்க அஜித் நிவார்ட் கப்ரால் இதனை தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்தி வைக்க முன்மொழிந்துள்ளது என கூறினார்.

இருப்பினும் தற்போதைய நிலைமையை நிர்வகிக்க வேறு வழிகள் உள்ளன என்றும் அந்த தந்திரோபாயத்தை பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.