மன்னாரிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னாரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.

இதேவேளை நாளை காலை 8 மணி முதல் 2 ஆவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.