சீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

இந்தியாவின் தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி என்பவர் உடல் நலக்குறைவால் தனது 89 ஆவது வயதில் நேற்று(24) காலமானார்.

குறிப்பாக 1980 காலப்பகுதிகளில் இவருடைய சிங்கம்பட்டி பகுதிக்குற்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில்,தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான இராணுவ முகாம்களை அமைக்க இவர் தனது நிலங்களை தலைவர் பிரபாகரனுக்கு வழங்க முன் வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படமான சீமராஜா திரைப்படம் இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதனால் சிவகார்த்திகேயன் தனது ஆழ்ந்த இரங்கல்களை குறித்த ஜமீனின் குடும்பத்துக்குத் தெரிவித்துள்ளார்.