இதுவரை 41 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (25) இதுவரை 41 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,182 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கண்டறியப்பட்டவர்களில் 40 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் டுபாயில் இருந்தும் அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.