
மின் பாவனையாளர்கள் தமது மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய சலுகைக் காலம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளைத் தொடர்ந்து பெப்ரவரி மாத மின் கண்டனத்தைச் செலுத்த மார்ச் 31ஆம் திகதிவரை சலுகைக் காலம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சலுகைக்காலம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை நீடிக்கபட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
இதன்மூலம் மின்பட்டியலை குறிப்பிட்ட தவணைக்குள் செலுத்தாவிடின் மின் பட்டியலில் சேர்க்கப்படும் வட்டி அறவீடு மற்றும் மின் துண்டிப்பு என்பன இந்தக் காலப்பகுதிக்குள் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.