மரண தண்டனை கைதியான முக்கிய அரசியல்வாதியை விடுதலை செய்த கோட்டாபய?

மரண தண்டனை கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணியின் தகவலை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு 16 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும் 77 சாதாரண கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வாவும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.