விற்பனை செய்த போதைப்பொருளின் பணத்தை பெற வந்தவர் மீது யாழில் கொலைவெறித் தாக்குதல்

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரை யாழ். சிறைச்சாலையில் 21 நாட்கள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த புதன்கிழமை சங்கானையில் வயல்வெளி ஒன்றில் காயமடைந்த நிலையில் நபர் ஒருவரை கண்ட மக்கள் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். அங்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்து விசாரித்ததில்,

தான் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் பணம்பெறுவதற்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் தன்னை சம்பந்தப்பட்ட நபர்கள் கட்டிவைத்து தாக்கியதாகவும் தான் தப்பி ஓடியே சங்கானை வயல்வெளியை வந்ததடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கொழும்பில் இருந்தே வந்தவர் என்றும் தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் அவரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியிருக்கின்றனர். அவரை யாழ்.சிறைச்சாலையில் 21 நாட்கள் தனிமையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com