விடுதலை புலிகள் என்று சந்தேகிக்கப்படும் 16 பேர் உட்பட 93 பேரை விடுதலை செய்த கோட்டாபய!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 77 கைதிகளும் இந்த 93 பேரில் உள்ளடங்குகின்றனர்.

மேலும், 16 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானவர்களின் முழு விபரங்களை சிறைச்சாலை திணைக்களம் இதுவரையில் வெளியிடவில்லை.