போக்குவரத்து சேவைக்கு பச்சைக்கொடி காட்டுமா அமைச்சு?

சிறிலங்கா சுகாதார அமைச்சு முழுமையாக பச்சைக்கொடி காட்டினால் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மக்கள் போக்குவரத்துச் சேவையை வழமைக்கு கொண்டுவர தயாரென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார். நாட்டின் நிலைமை கட்டம் கட்டமாக சீராகி வரும் நிலையில் மக்கள் போக்குவரத்துச் சேவையை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து அமைச்சு தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து அமைச்சைப் பொறுத்தவரை அனைத்து பேரூந்துகளும் ரயில்களும் சேவையில் ஈடுபட தயார் நிலையிலேயே உள்ளன. எனினும் சுகாதார அமைச்சின் முழுமையான சிபாரிசு கிடைக்கும்வரை காத்திருக்கின்றோம்.

அநேகமாக அடுத்த வாரம் 26 ஆம் திகதிக்குப் பின்னர் நாடு வழமைக்குத் திரும்புமென எதிர்பார்க்கின்றேன். சுகாதார அமைச்சு முழுமையாக பச்சைக்கொடி காட்டினால் போக்குவரத்துச் சேவை வழமைக்குத் திரும்பும்.

அதன்படி மாகாணங்களுக்கிடையில் பேரூந்து போக்குவரத்து முன்னெடுக்கப்படும், என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை போக்குவரத்துச் சேவை வழமைக்குத் திரும்பினாலும் பேரூந்து மற்றும் ரயில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற பயணிகள் மட்டுமே அதில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் அமைச்சர் உறுதியாக கூறினார்.

கடந்த காலங்களில் போன்று அளவுக்கதிகமான பயணிகளை பஸ் மற்றும் ரயிலில் பயணிக்க அனுமதிக்க முடியாது.

நிலைமை வழமைக்குத் திரும்பினாலும் சுகாதார விதிமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

இதனை கண்காணிக்கும் பொறுப்பினை போக்குவரத்து பொலிஸார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம், என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பொதுமக்கள் தமது பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயம்.

சிங்கள பொலிஸார் கட்டுப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நடப்பதே சாலச்சிறந்தது என்றும் அமைச்சர் கூறினார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com