யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: இருவர் படுகாயம்

யாழ்.பாண்டியன்தாழ்வு- சந்தணமாதா கோவிலுக்கு அருகில் வாள்வெட்டு குழு ரவுடிகள் நடாத்திய தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இன்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் (வயது – 27) என்ற இளைஞனே தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றயவரான முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்களையும் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றது. பாசையூரைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்றே இந்த கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com