210 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காம் வட்டாரத்தில் கஞ்சாவுடன் 55 வயதுடைய நபர் ஒருவர் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.வி.எம்.தாஹா தலைமையிலான பொலிஸாரினால் வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தின் ஹைறாத் வீதியில் வைத்து 210 கிராம் கஞ்சாவுடன் 55 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்