நேற்று மட்டும் 27 பேர்; நாடு திரும்பியவர்களே அதிகம்

இலங்கையில் நேற்று (21) மொத்தமாக 27 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,055 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கண்டறியப்பட்ட 27 பேரில் டுபாயில் இருந்து நாடு திரும்பிய 15 பேர், கடற்படையினர் 11 பேர் மற்றும் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 442 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.