
கனடா ரொரண்டோவில் உள்ள நந்தா உணவகத்தில், கடந்த 5ம் திகதி மாலை 3 மணிக்கு உணவு வாங்கிக் கொண்டு இருந்த நபர். ஏற்கனவே அங்கே நின்ற ஒரு இளைஞரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது உணவை வாங்கி முடித்த பின்னரும். குறித்த இளைஞரோடு வாக்குவாதப்பட்டு.
அவரை வெளியே வா சண்டை பிடிக்கலாம் என்று அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் வெளியே வந்து. இந்த நபரை தள்ளி விட்டுள்ளார். ஆனால் நிலை தடுமாறி கீழே விழுந்த , இன் நபரின் தலை(பிடரி) நிலத்தில் பலமாக அடிபட்டு. மூளையில் ஏற்பட்ட ரத்தப் பெருக்கு காரணமாக உடனே உயிரிழந்துள்ளார்.
