சட்டவிரோதமாக கொண்டு சென்ற மாடுகள் மீட்பு!

அனுமதிப்பத்திரத்தை மீறிய முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்கப்பட்டு, அவற்றை ஏற்றி வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இதன்போது 16 மாடுகள் மீட்கப்பட்டதுடன், வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.