இராணுவத்தால் சுடப்பட்டவரை பார்வையிட்ட கஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்குச் சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பார்வையிட்டார்.

குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (15) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற நிலையில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.