கொரோனா எண்ணிக்கை 925; நேற்று மட்டும் 10 பேர்

இலங்கையில் நேற்று (14) 10 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 925 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் கண்டறியப்பட்ட 10 பேரில் 8 கடற்படையினரும், அவர்களுடன் நெருங்கி பழகிய இருவரும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 471 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 445 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.