பிரித்தானியாவில் சுய தொழில் செய்வோருக்கான உதவி திட்டம் இன்று ஆரம்பம்

சுய தொழில் (Self-Employed) செய்யும் 110,000 பேர் இன்று வருவமான உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்துள்ளார்கள்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுய தொழில் செய்வோர் இன்று இந்த திட்டம் ஆரம்பித்த முதல் நாள் காலை 11 மணியளவில் 110,000 சுய தொழில் புரிவோர் வருமான உதவித் திட்டத்தின் (Self-Employed Income Support Scheme) கீழ் விண்ணப்பம் செய்துள்ளார்கள். இந்த தகவலை பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் மில்லியன் கணக்கான சுய தொழில் செய்வோர் ஒரு தடவை மட்டும் பெறும் உதவியாக அதிகப்படியாக 7,500 பிரித்தானிய பவுண்டுகளை பெற முடியும். இந்த விண்ணப்பம் செய்வோருக்கு பணம் 25 ஆம் திகதி செலுத்தப்படும்.

உங்கள் வியாபாரமும் பாதிக்கப்பட்டு இருந்தால் நீங்கள் உங்கள் கணக்காளர்களை தொடர்புகொண்டால் அவர்கள் அதை செய்து கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. அந்த வசதிகள் இல்லாதவர்கள் ஒன்லைன் மூலம் விண்ணப்பம்செய்ய முடியும்.

https://www.gov.uk/guidance/claim-a-grant-through-the-coronavirus-covid-19-self-employment-income-support-scheme#eligible