புலம்பெயர் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் கொரோனாவின் கோரத்தால் பலி

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று (09-04-2020) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

மிகச்சிறந்த ஆளுமை மிக்க ஊடகவியலாளரைத் தமிழ் மண்
இழந்து தவிக்கிறது.

பெரும் சோகம் ! பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார். பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் .

TTN தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என இவரது ஆளுமை மிகப்பெரியது . இவரது இழப்பு எமக்கெல்லோருக்கும் பேரிழப்பாகும் . கொரோனா கொடிய நோய்க்கு பூநகரியின் இளம் ஆளுமை ஒன்று எம்மை எல்லாம் விட்டு பிரிந்தது .

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com