கட்டுப்பாடின்றி ஓடி கழிவு வாய்க்காலுக்குள் பாய்ந்த சிறிலங்கா இராணுவ வாகனம்

முல்லைத்தீவு – வற்றாப்பளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வாகனம் ஒன்று 12.05 இன்றைய தினம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

வீதி வளைவில் திருப்ப முற்பட்டபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே குறித்த வாகனம், கழிவு நீர் வழிந்தோடுகின்ற வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இருந்தபோதும் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் உரிய இராணுவ பொறுப்பதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது