அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார் ஹரீன் பெர்னாண்டோ

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி  உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நடத்தப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஹரீன் பெர்னாண்டோ உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ஹரீன் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி  உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.