
உலகம் முழுவதும் கொவிட் -19 வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்கள் சிலரும் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொவிட் -19 வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரித்தானியாவில் மட்டும் நேற்றுவரை இலங்கையர்கள் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதில் இரண்டு மருத்துவர்களும், இரண்டு தமிழர்களும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் (09.04.2020) லண்டனில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸினை வதிவிடமாகக் கொண்ட பூநகரியின் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகன் ஆனந்தவர்ணன் என்ற இளைஞனே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் TTN தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.