பம்பைமடு குப்பை மேட்டு தீ கட்டுக்குள்!

வவுனியா – பம்பைமடு குப்பைமேட்டில் ஏற்பட்ட தீப்பரவல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்புப் பிரிவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பம்பைமடு குப்பை மேட்டில் இன்று (7) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபை மற்றும் பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்ததனர்.