7 வயது சிறுமியும் கொரானா தொற்றால் சிறிலங்காவில் பாதிப்பு

ஸ்ரீலங்காவில் 7 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட 29 பேரில் குறித்த 7 வயது சிறுமியும் அடங்குவர் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஸ்ரீலங்காவில் 29 பேரிற்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தொற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 797 ஆக அதிகரித்தது. தற்போதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 215 பேர் குணமடைந்துள்ளனர்