
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இதுவரை 89 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோதனையில் எந்தவொரு நபருக்கும் தொற்று இல்லை எனவும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும்,மருத்துவ நிபுணருமான எஸ். ரவிராஜ் தெரிவித்தார்.
இன்று (09) யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எஸ். ரவிராஜ் இதனை தெரிவித்தார்.
மேலும் ஒரு நாளில் 20 தொடக்கம் 24 பேரில் பரிசோதனைகளை ஒரு தடவையில் மேற்கொள்ள முடியும் அதற்கு மேலதிகமாக பரிசோதனை செய்ய வேண்டுமேயானால் ஒரு நாளில் இரண்டு தடவைகள் பரிசோதனை செயற்பாட்டினை ஏற்று செயற்படுத்துவதன் மூலம் 45 பேருக்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்