உதவிபுரிய முயன்ற இளைஞன்; ஊரடங்கை மீறியதாக கைது!

கொழும்பில் நிர்க்கதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மலையக இளைஞர்களை ஊரடங்கு பாஸ் இல்லாமல் அத்துமீறி சந்தித்த குற்றச்சாட்டில் தலவாக்கலையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்கு பாஸ் இல்லாமல் மேற்குறிப்பிட்ட மலையக இளைஞர்கள் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருந்த வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் என்று முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த மலையக இளைஞர்களை அவர்களது ஊருக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் அரசியல்வாதிகள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் பேசியதை தொடர்ந்து,

தனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாடு என்ன காரணத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது என தெரியவராத நிலையில், அதனடிப்படையிலேயே தன்னை முகத்துவாரம் பொலிஸார் கைது செய்யப் போவதாக குறித்த இளைஞர் இன்று (4) காலை பொலிஸ் தலைமையகம் முன்னால் நின்று முகநூல் நேரலை காணொளி மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த இடத்தில் நின்ற இளைஞர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் தன்னை முகத்துவாரம் பொலிஸார் தேடிவந்த நிலையில் அவர்களிடம், கைதாவது பாதுகாப்பின்மை எனக் கருதி பொலிஸ் தலைமையகம் வந்துள்ளதாக குறித்த இளைஞர் தெரிவித்திருந்தார்.