மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது – மத்திய அரசு!

மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக  மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இந்திய மருத்துவ அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும், இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தேவையில்லை என மத்திய அரசு கூறுகிறது.

அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப் பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.