கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மோடி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம்,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டெல்லியில் கொரொனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இதனையடுத்து முக்கிய நகரங்களில் ஊரடங்கு  உத்தரவை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், மேற்படி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.