கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 இலட்சத்தினை நெருங்குகின்றது!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது.

இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 43 இலட்சத்து 64 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 02 ஆயிரத்து 379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.