கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 209 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை தொற்று உறுதியான 93 ஆயிரத்து 772 பேரில் 2 ஆயிரத்து 267 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 588 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.