தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது- டி.டி.வி.தினகரன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்றுவரும் நிலையில், பெரியளவிலான மாற்றமொன்று தமிழகத்தில் வரும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் சென்னை மாவட்டம் அடையாறு பகுதியில் குடும்பத்தினர் சகிதம் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள் எனவும் தீய சக்திகள், துரோக சக்திகளிடம் மக்கள் ஆட்சியை ஒப்படைக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.