
யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.
தாய், தந்தை இழந்த நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த உமா சுதன் சாம்பவி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.