பிரான்ஸில் இன்னும் 2 மாதத்திற்கு நீடிக்கப்பட்ட ஊரடங்கு

கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கை ஜூலை மாதம் 24-ம் வரை நீடிக்க பிரான்ஸ் அரசு சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா 212 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பல இலட்சக்கணக்கான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனை சபைக் கூட்டத்தின் முடிவில், இந்த அவசரகாலச் சகாதார நிலையை மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து ஜுலை 24ம் திகதிவரை பிரகடணப்படத்தி உள்ளனர்.

முதற்கட்டப் பிரகடணம், மே மாதம் 24ம் திகதி முடிவடைவதால், உடனடியாக சுகாதார அவசரகாலநிலையை நீக்கினால், கட்டுப்பாடுகள் தளர்ந்து, இரண்டாவது கொரோனாத் தொற்றலையை ஏற்படுத்திவிடும் என்றும், அதனைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் எதுவார் பிலிப், இந்தச் சுகாதார அவசரகாலநிலை நீட்டிப்பை இன்று அறிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com