
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் லண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவர் வவுனியாவை பிறப்பிடமாகவும் ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் லோகநாதனின் மகனும் ஆவார்
நீண்ட கால தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தமிழ் பற்றாளருமான பிரதாபன் அவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர். பல நற்பணிகளை ஆற்றியுள்ளார். பிரதாபன் அவர்கள் லண்டனில் பிரித்தானிய விளையாட்டுக் கழகத்திலும் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்தவர். எப்பொழுது அவர் கதவை தட்டினாலும், என்ன உதவி என்றாலும் தயங்காமல் செய்யக் கூடியவர், என்று அனைவராலும் போற்றப்படும் ஒரு உன்னதமான மனிதரை நாம் இன்று இழந்து நிற்கிறோம்.
இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.