மட்டக்களப்பு சிறுமியின் நெகிழவைக்கும் செயல்!

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்றிற்கு எதிராக பலரும் பலவழிகளில் உதவிவருகின்றனர்.

இவ் வேளையில் பெரியபோரதீவை சேர்ந்த கெங்காதரன் கஜேந்தினி தம்பதியினரின் புதல்வி தணிகா என்பவர் தான் தனது உறவிர்கள் மூலம் உண்டியலில் சேமித்த பணத்தினைக்கொண்டு தனது தந்தையூடாக கிருமித்தொற்று நீக்கும் இயந்திரம் (Spraying Machine)ஒன்றினை கொள்வனவு செய்து பொலிஸ் நிலைய அலுவலகத்திற்கு வழங்கியுள்ளார்.

இதனூடாக பொது இடங்களில் இலகுவாக கிருமித்தொற்று நீக்கலை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதோடு இவ்வாறா நெகிழ்ச்சியான நிகழ்வுகள் களத்தில் கொரோனா தொற்றினை வராது தடுக்கும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் உற்சாத்தையும் உத்வேகத்தினையும் அளிக்கின்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் சிறுமி தணிகாவிற்கும் அவரது பெற்றோருக்கும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் அவர்கள் கூறியுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com