பால்மா விலை உயர்த்தப்பட்டுள்ளது!

உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, 1 கிலோ கிராம் நிறையுடைய பால்மா பொதியின் விலை 85 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 400 கிராம் பொதி 345 ரூபாயிலிருந்து 380 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com