ரிஐடி விசாரணை குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டார் மணிவண்ணன்

பயங்கரவாத விசாரணை பிரிவினர் (ரிஐடி) தன்னிடம் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று (01) காலை யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியிலுள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் என்னிடம் முன்னெடுத்த விசாரணை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்த அபிமன்னசிங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளேன். – என்றார்.

மேலும் கொரோனா சந்தேக நபர்களை தனிமைப்படுத்துவதற்கு அமைக்கப்படும் முகாம்களை மக்கள் செறிவாக வாழ்கின்ற குகடியிருப்பு பகுதிகளில் அமைப்பதானது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய அவர் மக்கள் செறிவாக வாழ்கின்ற இடங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதை நிறுத்த வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com