கிண்ணியாவில் மின்னல் தாக்கத்தால் குடும்பஸ்தர் பலி

கிண்ணியா கண்டல் காடு கிராமத்தில், மாடு மேய்த்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை (01.05.2020) மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான முகம்மது பாருக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு,மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com