
முகநூல் மற்றும் டிக் டொக் செயலிகளில் வெளியான பாடசாலை செல்லும் சிறுவர்களின் காணொளிகள் தொடர்பில் தேசிய சிறுவர் அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவர்கள் விளையாட்டுத்தனமாக செய்வதாக, சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்ட போதிலும், சமூகவலைத்தள கவர்தலுக்காக இந்த காணொளிகள் தொடர்பில் தூண்டப்பட்டு அல்லது வழிநடத்தப்படுகிறார்களா என்ற கருத்துக்கள் எழுந்திருந்தது.
அது போன்ற காணொளிகளை தடுக்குமாறு தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகார சபை தலைவர், சம்பந்தப்பட்ட காணொளிகளில் இடம்பெற்ற சிறுவர்கள் பொலனறுவை மற்றும் நிக்கவரட்டியவை சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.