
இன்று காலை குடத்தனையில் வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸார் தாக்கியதில் மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு இன்று மாலை உணவு கொண்டு சென்ற இரு பெண்களை (அவர்களிடம் வைத்தியசாலை பாஸ் இருந்துள்ளது) கைது செய்த பருத்தித்துறை பொலிஸார் அவர்கள் இருவர் மீதும் பொலிஸாரை கடமை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு போட்டுள்ளனர்.
அந்த வழக்கில் நாளை சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகிறார்.