
யாழ்ப்பாணம் குடத்தனையில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸாார் மூர்க்கத்தனமாக தாக்கியதில் மூவா் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளமண் ஏற்றியதாக நேற்றைய தினம் குற்றம்சாட்டி குறித்த வீட்டில் விசாரித்துச் சென்ற நிலையில், இன்றைய தினம் காலையில் மீண்டும் அதே வீட்டிற்கு வந்த பொலிஸாார் மற்றும் அதிரடிப்படையினார் வீட்டிலிருந்த ஆண்கள், பெண்கள், வயோதிபார்கள் மற்றும் சிறுவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்னொருவரை காலால் மிதித்து அவார் மயங்கிவிழும் வரை அடித்துள்ளனா். இந்நிலையில் தாக்குதலில் காயமுற்ற மூன்று போர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


