
மீன் கொள்வனவுக்காக புத்தளம், நீர்கொழும்பு உள்ளிட்ட அபாய வலயங்களில் இருந்து தினசரி வாகனங்கள் தமிழர் தாயகங்களில் நுழைவதாக சுட்டிக்காட்டியிருக்கும் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள், இதுவே எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்கும் என எச்சரித்திருக்கின்றனர்.
குறிப்பாக வட தமிழீழம் , மன்னார் மாவட்டத்திற்கு மட்டும் 35 வாகனங்கள் புத்தளம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்து தினசரி மின் கொள் வனவுக்காக வந்து செல்கின்றன. அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வந்து செல்வதான கூறப்படுகின்றது. எனவே இதன் ஊடாக எதிர்காலத்தில் பாரிய ஆபத்துக்கள் ஏற்படலாம்.
எனவே இந்த நுழைவை தடுத்து நிறுத்தி அந்தந்த மாவட்ட மீனவர்கள் தங்கள் பிரதேசங்களில் அல்லது அயல் மாவட்டங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கவேண்டும். அல்லது அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனங்களுக்கு அனுமதி களை வழங்கி வெளிமாவட்டங்களுக்கு மீனை ஏற்றலாம்.
என சுட்டிக்காட்டப்படுகின்றது.